சொல் பொருள்
வாய்த்தூய்மை – பொய்புரட்டுப் பேசாமை
சொல் பொருள் விளக்கம்
பல் விளக்கல், கழுவுதல் ஆகியவை வெளிப்படையான வாய்த்தூய்மையாம். நாளைக்கு மூன்று வேளை பல் விளக்குவாரும், பத்து முறை வாய் கொப்பளிப்பாரும் கூட ‘வாய்த்தூய்மை’யற்றவராகச் சொல்லப்படுதல் உண்டு. அது வாயழுக்கு. நாற்றம் ஆகியவற்றைக் குறியாமல் பொய் கூறும் நாற்றம் குறிப்பதாம். “வாயும் கையும் தூய்மையாக இருந்தால் எங்கும் பிழைத்துக் கொள்ளலாம்” என்னும் வழக்கில் வாய்த் தூய்மை பொய் கூறாமையும், கைத் தூய்மை களவு செய்யாமையுமாதல் அறிக. ‘வாய் சுத்தம் இல்லாதவன்’ என ஒருவனை எளிமையாகத் தள்ளிவிட இடமாவது இக்குறையாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்