சொல் பொருள்
(வி) ஆசமனஞ்செய்தல்,
சொல் பொருள் விளக்கம்
வலது உள்ளங்கையில் நீரை இட்டு, மும்முறை உட்கொள்ளல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sip water ceremonially; to perform ācamaṉam
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என பார்ப்பார் ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/58-63 ஈக்கள் மொய்க்கும் சமைக்கப்பட்ட கள்ளினைக் கொண்டது இந்த ஆறு என்று பார்ப்பனர் தவிர்த்தார் நீராடுதலை; ஆடவரும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணப் பொருட்களைத் தூவப்பெற்றதாயிற்று என்று அந்தணர்கள் நீராடவில்லை ஆற்றில்; வையையின் நீர் தேன் கலந்து மழுமழுவென்றானது என்று ஐயர் வாய்கொப்பளிக்கவில்லை ஆற்றில்; வாய்பூசு உறார் – வாய்பூசுறார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்