சொல் பொருள்
(பெ) நற்சொல்லாகிய நிமித்தம்,
சொல் பொருள் விளக்கம்
நற்சொல்லாகிய நிமித்தம், இது தற்செயலாகக் கேட்ட நற்பேறு தரும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Chance-heard word, considered a good omen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல் தலைவர் வாய்வது நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் – முல் 7-21 அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய், யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன் உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின் அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, 10 பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க – சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின் மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து, இடைமகள் (குளிரால்)நடுங்குகின்ற தோளின் மேல் கட்டின கையளாய் (நின்று), ‘கையிலுள்ள கடுமையான கோல் (உடைய)இடையர் பின்னே நின்று செலுத்துதலைச் செய்ய “இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவர் (உம்)தாயர்” என்று கூறுகின்றோளுடைய நன்மையான நற்சொல் (நாங்கள்)கேட்டோம், அதனால் நல்லதே, நல்லவர் நற்சொல்; பகைவர் மண்ணை வெற்றிகொண்டு பெற்ற திறையினையுடையோராய், (தமது)வினையை முடித்து வருவது (நம்)தலைவர்க்கு நேர்வது (உறுதி), நீ நின் 20 துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்