Skip to content

சொல் பொருள்

(வி) 1. முடியைச் சீவு, கோதிவிடு, 2. பூசு, 3. திரட்டி எடு, அள்ளு,  4. யாழ் நரம்பைத் தடவு,  5. (விளக்குமாற்றால்) கூட்டு, பெருக்கு, 

சொல் பொருள் விளக்கம்

முடியைச் சீவு, கோதிவிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

comb the hair, run the fingers through the hair, smear, take in a sweep, scoop, play upon the strings of a lute, sweep (with a broom)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15,16

மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து

சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/2-4

சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தைப்
பிற பொருள்களையும் சேர்த்துக் கூந்தலில் அழகு உண்டாகப் பூசி,
அவை காய்ந்துபோன பின் உதிர்ந்துபோன துகள்கள் பரவிய கூந்தலையுடைய

வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8

தம்பால் வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்
– நிரம்ப உண்டல் வேண்டி – வார்தல் – சேரக் கொள்ளுதல்

மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 22,23

மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது – கலி 96/22-24

சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையில் பிடித்த அலகினால் வாரப்பெற்ற
மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது
அந்தக் குதிரையோ பிறாண்டியது?

– வாரூஉ – அலகினால் துராலை அகற்றி – துரால் – செற்றை, குப்பை – நச்.உரை, பெ.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *