சொல் பொருள்
(பெ) வாலாமை, தூய்மையின்மை, தீட்டு,
சொல் பொருள் விளக்கம்
வாலாமை, தூய்மையின்மை, தீட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
uncleanliness, ceremonial impurity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/2-4 முற்றின சூலைக் கொண்ட வலிய பெண்யானை கன்று ஈன்று வருந்த, பால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து தீட்டுள்ள ஆண்யானை வளைந்த தினைக்கதிரைக் கவர்வதால் ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடைநாள் ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/5,6 மிக்க நீரைச் சொரிந்த நீண்ட பெயலைக்கொண்ட கார்காலத்தின் கடைநாளில் மழைபெய்து நாள் கழிந்த தீட்டுள்ள வெளிய மேகம் மேகம் மழைபெய்வதை அது ஈனுவதாகக் கொண்டு, அதன் பின் அது தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி, அதனை வாலா வெண்மேகம் என்று புலவர் கூறியிருப்பதின் நயம் சுவைத்து மகிழத்தக்கது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்