சொல் பொருள்
வாழாக்குடி – மணந்து தனித்தவள்
சொல் பொருள் விளக்கம்
திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள். கணவனை இழந்தவள் வாழாக் குடியல்லள். அவள் கைம்பெண். அறுதாலி எனப்படுவாள். கணவனால் விலக்கி வைக்கப்பட்டோ, தானே விலகியோ தனித்து வாழ்பவளே வாழாக்குடியாம். இங்கும் வாழ்க்கை பொதுமை நிலையில் நீங்கி இல்வாழ்க்கைப் பொருளுக்கு ஆவது வழக்காம். “அவள் வாழாக் குடியாள்; அவளிடமா குழந்தையைத் தருகிறாய்” என்பது வாழாக்குடிக்குப் பெண்களும் தரும் பரிசு.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்