சொல் பொருள்
வாழிபாடல் – எல்லாம் போயது
சொல் பொருள் விளக்கம்
உள்ள பொருள் எல்லாம் இழந்து போதலைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொற்களுள் ஒன்று வாழிபாடல் என்பது. வாழிபாடி விட்டால் கூட்டமெல்லாம் போய் விடும். அதுபோல் எல்லாம் போயது என்னும் பொருளது. கூத்தாடும் இடத்தில் கூடிய கூட்டம், ஆட்டம் முடிந்ததும் ஒருங்கே போவது போல என்னும் குறளின் பொருளை விளக்கும் வழக்குச் சொல் வாழிபாடலாம். இது, ஏரல் வட்டார வழக்காகும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்