சொல் பொருள்
(பெ) கல்வி,
சொல் பொருள் விளக்கம்
கல்வி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
learning, education
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/4-7 கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி, அவன் வறுமையில் அவனோடு பகிர்ந்து உண்ணாமல், தான் கற்ற கல்விக்குக் கேடுசெய்தவனுடைய பொருளைப் போல் தானாகவே அழிந்து போவான், தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவனது பிற்காலத்திலும் அது அவனைப் பழிதீர்க்காமல் விடாது;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்