சொல் பொருள்
(பெ) 1. இளைஞன், 2. வீரன்,
சொல் பொருள் விளக்கம்
இளைஞன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
youth, warrior
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது கலத்து அன்ன கனிய ஆலம் போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் தண்ணிய இனிய ஆக எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303 புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம், பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி குளிர்ச்சிபொருந்தியதாகவும், இனிமையானதாகவும் ஆகும்படி என்னையும் அழைத்துக்கொண்டு செல்வாயாக, இளங்காளையாகிய நீ சுடர் தொடி குறு_மகள் இனைய எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/3,4 ஒளிவிடும் தோள்வளையைக் கொண்ட இளையமகள் வாடும்படியாக, என்ன பயனைத் தருமோ, இளங்காளையே! உனது பயணம்? வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே – புறம் 237/14 வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்