சொல் பொருள்
(பெ) பொழுது விடிகின்ற நேரம்,
சொல் பொருள் விளக்கம்
பொழுது விடிகின்ற நேரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
break of day, dawn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. கிழக்கில் வெள்ளி முளைக்கின்ற காலம். விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 71,72 விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே 2.வானம் வெளுக்கின்ற நேரம். வான்_கண் விரிந்த விடியல் – மலை 257 வானம் துயிலெழுந்த விடியற்காலத்தே, 3.பறவைகள் துயில் எழும் நேரம். நள்ளிருள் விடியல் புள் எழ போகி – பெரும் 155 செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று, 4.நள்ளிரவுக்கு அடுத்து வரும் காலம். காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/1-3 காலையும் பகலும் செயலற்ற மாலையும் ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப் பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்