சொல் பொருள்
விடியாமூஞ்சி – கிளர்ச்சியில்லா முகம்
சொல் பொருள் விளக்கம்
விடியாமை, பொழுது புறப்படாமை. பொழுது புறப்படாப் பொழுதில் இருள் கப்பிக்கிடக்கும். அப்பொழுதில் முகமும் இருள்படிந்து கிடக்கும். விடியாப் பொழுதில் பார்க்கும் முகத்தைப் போல, விடிந்து வெளிச்சமான பொழுதிலும் ஒருவர் முகம் இருந்தால் அதனை ‘விடியாமூஞ்சி’ என்பர். இங்கு விடிதல் என்பது சுறுசுறுப்பு, மலர்ச்சி, கிளர்ச்சி ஆகிய பொருள்களைக் குறிப்பதாம். “அழுமூஞ்சிக்குத் திருமணமாம் அன்று பிடித்ததாம் அடைமழை; விடியா மூஞ்சிக்கு திருமணமாம் விளக்கணைந்ததாம் அந்நேரம்” என்பது வழக்குமொழி.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்