சொல் பொருள்
விடிவுக் காலம் – நற்காலம்
சொல் பொருள் விளக்கம்
விடிகாலம், விடிபொழுது, வைகறை, காலை என்பன கதிரோன் எழுந்து இருளகல ஒளிபரவும் பொழுதாம். அவ்விடிகாலம் மகிழ்ச்சி சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும். பொழுது இருள் நீங்கி ஒளி சூழும். அப்பொழுதை விரும்புவது இயற்கை. அதுபோல் வறுமையும் நோயும் அல்லலும் வாட்ட வாழும் ஒருவர் அவற்றை நீங்கும் பொழுதை விடிபொழுது போல எண்ணுகிறார். “இனிக்கவலைப்பட ஒன்றுமில்லை. கவலைக்கு விடிவு காலம் வந்து விட்டது” என்று சொல்லி மகிழ்கிறார். வெயிலில் வாடுபவர் நிழலை நோக்கி, அது கிடைத்தால் விடிவு தானே!
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்