சொல் பொருள்
விண்ணம் – கழிவு.
விண்ணம் – வானுலகு = வான் + உலகு
மாறுபாடு, வேறுபாடு, சிதைவு, பிளவு, உறுப்புக்கோணல், தடை, கேடு, சேதம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sky, celestial world, heaven
சொல் பொருள் விளக்கம்
விட்டு வெளியேறும் கழிவை (மலத்தை) விண்ணம் என்பது முகவை வட்டார வழக்காகச் சொல்லப்படுகிறது. விட்டு வெளியேறும் அதனை விட்டை என்பர். பிற விலங்குகளின் கழிவுக்கு அச்சொல் வழங்கலால் இது மனிதர்க்கு மாற்றுச் சொல் போலும்.
பயன்பாடு
ஆயதோர் வைகல் வேட்டை யாடுவா னண்ணல் விண்ணந்
தாயதோர் பொரியக் குன்றிற் சந்தனச் சார னண்ணி
மேயதோ லரிமா னேனம் வேங்கையெண் கிரலை யின்ன
தீயதோர் விலங்கு வேட்டஞ் செய்துயிர் செகுக்கு மெல்லை. – திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]
ஆயது ஓர் வைகல் – அங்ஙனமாகியதொரு நாளில்,
அண்ணல், வேட்டை ஆடுவான் – உக்கிரவழுதி வேட்டை யாடுதற்
பொருட்டு, விண்ணம் தாயது பொதியக் குன்றில் – வானுலகை ஊடுருவிச்
சென்றதாகிய பொதியின் மலையின், சந்தனச் சாரல் நண்ணி – சந்தன
மரங்கள் நெருங்கிய சாரலை அடைந்து, மேய தோல் அரிமான் ஏனும்
வேங்கை எண்கு இரலை இன்ன – அங்குள்ள யானையும் சிங்கமும் பன்றியும்
புலியும் கரடியும் மானும் என்னும் இவை முதலாகிய, தீயது ஓர் விலங்கு –
தீமையைக் கருதும் விலங்குகளை, வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை
– வேட்டையாடி (அவைகளின்) உயிரைப் போக்கும் பொழுது எ – று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்