சொல் பொருள்
(பெ) 1. நடுக்கம், 2. சுழற்றுதல்,
சொல் பொருள் விளக்கம்
நடுக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trembling, brandishing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழில் மாடத்து கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு_உற்று மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/45-48 அழகிய அந்த மாடத்தில் கையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு, மை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த பாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50 ஆற்றில் அணிஅணியாக, வெண்மையான வாளைச் சுழற்றுவோரும், ஒளிரும் குத்துவேலை ஏந்திக்கொண்டிருப்போரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்