சொல் பொருள்
(பெ) 1. நடுக்கம் 2. வேட்கை, 3. விரைவு,
சொல் பொருள் விளக்கம்
நடுக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trembling, desire, haste
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு மையல் வேழம் மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி சூருறு மஞ்ஞையின் நடுங்க – குறி 162-169 கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து, கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து, மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால், உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக, சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு, நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று, தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை ————- ———————- —————– கொடியோர் சென்ற தேஎத்து மடியாது இனையை ஆகி செல்-மதி வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/9-14 மலையையும் நடுங்கச் செய்வது போன்ற குளிரைக் கொண்டவாடைக் காற்றே ——————– ———————- கொடியராய என் தலைவர் சென்ற திசையில் அயராது இதுபோலவே இருந்து செல்வாயாக பொருளீட்டும் தொழிலில் பெருவேட்கை கொண்டவர் என்னை நினைத்துப்பார்க்கவும் செய்வார் ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி கை தலை வைத்த மையல் விதுப்பொடு கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/11-15 ஒள்ளிய நிறமுடைய வலிய புலி பாய்ந்ததாக, திரண்ட அடியினையும் வெள்ளிய கொம்பினையுமுடைய களிறு முழக்கிய ஒலியினைக் கேட்டு அஞ்சி தன் கன்றினைவிட்டு ஓடிய புல்லென்ற தலையினையுடைய இளைய பிடியானை கையைத் தலைமீது வைத்துக்கொண்ட மயக்கம் தங்கிய விரைவுடன் தம் மகவினைக் காணாதொழிந்த பெண்டிர் போல அக் கன்றினைத் தேடித்திரியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்