சொல் பொருள்
1. (எ.வி.மு) கேட்கவேண்டாம்,
2. (பெ) கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
கேட்கவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do not enquire, asking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என் திறம் யாதும் வினவல் வினவின் பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு – கலி 19/7-13 போ, இப்போது போய் நீ மேற்கொள்ளும் பொருளீட்டும் தொழில் முடியுந்தறுவாயில் அன்பு அற்றுப்போகுமாறு மாறுபட்டு, நான் வேண்டுமென்றே பிரிந்துவந்த என் மனைவி எப்படி இருக்கிறாள் என்று தெரியுமா? என்று இங்கிருந்து அங்கு வருவாரிடம் என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால், ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர் அவலநிலை உருவாகக் கூடும் மாவின் நறு வடி போல காண்-தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென் யான் என தேற்றி பல் மாண் தாழ கூறிய தகை சால் நன் மொழி மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/7-14 மாவின் நறும் பிஞ்சு போல, காணுந்தோறும் ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட வாழமாட்டேன் நான்’ – என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும் தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு” எனச் சிறந்த உனது பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாக வினவுதல் நீங்காத, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்