சொல் பொருள்
(வி.எ) வினவி,
சொல் பொருள் விளக்கம்
(வி.எ) வினவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
asking for, enquiring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு அற மண்_உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/16-19 மாசறக் கழுவப்பட்ட நீல மணியையே ஏளனம்செய்யும் கரிய கூந்தல் பூ அணிந்து வண்டுகள் ஆரவாரிக்கும் அழகைப் பெறுவதை விரும்பமாட்டேன், சோகப் பாட்டை இசைத்துக்கொண்டு உன் பாணன், என் வீட்டுக்கு நீ போன பரத்தையர் வீட்டைப்பற்றி வினவிக்கொண்டு வராமலிருப்பதைப் பெறுவேனாயி – நீ சேர்ந்த இல் வினாய்- நீ சென்றிருக்கின்ற பரத்தையர் வீடு யாது என வினவி – நச்.உரை, பெ.விளக்கம் செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12 தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்