சொல் பொருள்
(வி) தேம்பியழு,
சொல் பொருள் விளக்கம்
தேம்பியழு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heave a sob, as a child
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு யானும் தாயும் மடுப்ப தேனொடு தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி நெருநலும் அனையள்-மன்னே இன்றே மை அணல் காளை பொய் புகல் ஆக அரும் சுரம் இறந்தனள் என்ப – நற் 179/1–9 வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட தான் விளையாடும் பந்தை நிலத்தில் எறிந்து, விளையாட்டுப்பொம்மையைத் தூக்கிப்போட்டுத் தன் அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட என் காரியக்காரியான சிறுமகள், மானின் மருண்ட பார்வையைப் போன்ற தன் மயக்கந்தரும் பார்வையோடு நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த இனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி அழுதுகொண்டு நேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்; இன்றோ, கரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர், விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்