சொல் பொருள்
(வி) 1. அதிசயி, ஆச்சரியப்படு, 2. நன்கு மதி
சொல் பொருள் விளக்கம்
அதிசயி, ஆச்சரியப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wonder, esteem, admire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9 வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு கைம்மிக்கது மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/11-13 நன்மையான் மிக்கவரை பெரிதும் மதித்தலும் இலம் சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்