சொல் பொருள்
(வி) உடலில் வியர்வை தோன்று, 2. (பெ) வியர்வை,
சொல் பொருள் விளக்கம்
உடலில் வியர்வை தோன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sweat, perspire, sweat, perspiration
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1 முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள், மெய்யது வியரே மிடற்றது பசும் புண் – புறம் 100/2 உடம்பின்கண்னது வேர்ப்பு, மிடற்றின்கண்ணது ஈரம் புலராத பசிய புண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்