சொல் பொருள்
(பெ) அகன்ற இடம்
சொல் பொருள் விளக்கம்
அகன்ற இடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wide open space
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் – மலை 350 முரசுகள் தூக்கம்(=ஓய்வு) அறியாத அகன்ற ஊரினில்(கொண்டாடும்) விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/1-3 விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில் கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில் வல்லவன் அல்லன்; வாழ்க! அவன் தலைமாலை!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்