சொல் பொருள்
(பெ) 1. பெருமை, 2. அகலம், பரப்பு, 3. மிகுதி,
சொல் பொருள் விளக்கம்
பெருமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
greatness, width, extension, abundance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5 பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள்தாழியை விழவு நின்ற வியல் மறுகின் – மது 328 விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும், அகல் நகர் வியல் முற்றத்து – பட் 20 அகன்ற மனையின் பரந்த முற்றத்தில் வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10 கொடிய சினத்தினையுடைய அரசனது மிகப்பெரிய பாசறைக்கண்ணே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்