Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. விரவிய – கலந்த, 2. விரவிய – சுற்றிக்கொண்ட, கட்டிப்போட்ட,

சொல் பொருள் விளக்கம்

விரவிய – கலந்த

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coil up, as rope,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாள்மீன் விராய கோள்_மீன் போல – பட் 68

(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல,

இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10

இஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,

வெருவார்
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/23,24

அஞ்சாத வீரர்
கூட்டத்தின் தன்னுடைய கால்களைச் சுற்றிக்கொள்ளும் வரி பொருந்திய குடரை ஒருங்குசேர்த்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *