சொல் பொருள்
(பெ) யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று,
சொல் பொருள் விளக்கம்
யாரோ ஒருவர் தற்செயலாகக் கூற, அது நிமித்தமாகக் கொள்ளப்படும் கூற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
accidental utterance of an unknown person taken as good omen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை அரும் கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 6-11 பெரிய மழையைப் பெய்த சிறு(பொழுதாகிய) துன்பமூட்டும் மாலைக் காலத்து அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய், யாழின் ஓசையினையுடைய கூட்டமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி, நெல்லுடன் உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லையின் அரும்புகள் அவிழ்ந்த பூவைத் தூவி, கைகூப்பி வணங்கி, பெரிய முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்க – நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/6,7 நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும் செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்