சொல் பொருள்
(வி.எ) மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை
சொல் பொருள் விளக்கம்
மலர்ந்து, விரிந்து என்பதன் சொல்லிசை அளபெடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
having blossomed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பேஎய் தலைய பிணர் அரை தாழை எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் வயிறு உடை போது வாலிதின் விரீஇ புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/5-8 பேய் போலும் தலையினையுடைய சருச்சரை வாய்ந்த அரையினையுடைய தாழையின் முள்ளாகிய பற்களையுடைய நீண்ட புற இதழ்கள் பலவும் ஒருங்கே காத்து நிற்க அதன் வயிற்றினை இடமாகவுடைய பூ தூயதாய் விரிந்து புலால் நாற்றத்தைத் தாக்கி ஒழிந்த மலர் நாற்றம் கமழும் இடத்தின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்