சொல் பொருள்
விருந்து வைத்தல் – திருமணம் முடித்தல்
சொல் பொருள் விளக்கம்
திருமண நிகழ்ச்சியில் முதன்மையானது தாலிகட்டல்.திருமணச் சிறப்பில் முதன்மையானது விருந்து. ஆதலால் திருமணமாக வேண்டிய அகவையினரைக் காணுங்கால் “எப்பொழுது விருந்து வைக்கப்போகிறீர்?” என வினவுவது வழக்கம். திருமணம் பல்கால் தட்டிப்போகின்றவர்கள், இப்படிக் கேட்டுக் கேட்டுச் சலிப்புற்றுக் கேட்பவர்களைக் காணுமுன்னே தலை மறைந்து ஒதுங்கி விடுவதும் உண்டு. விழாக்கள் என்றாலே, விருந்துதானே பேசப்படுகின்றன. சாப்பாட்டுப் பேச்சே சலிப்பிலாப் பேச்சாகப் பலர்க்கு இருத்தல் கண்கூடு. அவர்கள் சாப்பாட்டைப் பற்றிப் பேசுங்கால் அதில் மூழ்கி மூழ்கி முத்தெடுப்பது போலவே சுவைத்துப் பேசுவதும் ஒரு சுவையேயாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்