Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. விரவி, கலந்து, 2. விரவி, பரப்பி, 

சொல் பொருள் விளக்கம்

விரவி, கலந்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mixed with, spread out

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218

சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து,

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *