சொல் பொருள்
(பெ) விலைமகளிர்,
சொல் பொருள் விளக்கம்
விலைமகளிர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
women, who engage in sexual intercourse for money
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும் விலைநலபெண்டிரின் பலர் மீக்கூற உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/7-11 முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகம் செல்லக்கண்டு வைத்தும் உடன் செல்லாது, யான் இப்பொழுதும் தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல, பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ நிலையாக இருக்கிறேன் யான் வாழ்க என்று பலவகையாலும் மாண்புற்ற நிலமாகிய மகள் புலம்பிய காஞ்சியும் உண்டென்று அறிவுடையோர் கூறுவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்