சொல் பொருள்
1. (வி) வெளுத்திரு,
2. (பெ) 1. வெண்மை, 2. வெண்மையான கொழுப்பு, 3. வெண்மையான ஊன், 4. இளமையானது, முற்றாதது
சொல் பொருள் விளக்கம்
வெளுத்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be pale, whiteness, fat which is white in colour, pale flesh, that which is young, immature
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளர்த்த வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 254/3,4 வெளுத்த வளையில்லாத வறிய கையைத் தலைமேலே வைத்து அணில்வரி கொடும் காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/4,5 அணிலினது வரி போலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதை போன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல் விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5 வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய் அவரை கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/10,11 அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8 நெய் பெய்து சமைத்த கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில் விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10 கொழுப்பினையுடைய ஊனைத்தின்ற விசைகொண்ட சிலையினராய மறவர்கள் குறும் தாள் ஏற்றை கொழும் கண் அம் விளர் நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/8,9 குறுகிய கால்களையுடைய பன்றியின் கொழுவிய ஊன் துண்டங்களான நல்ல வெள்ளிய ஊனை நறிய நெய்யைஉருக்கி அதன்கண் பெய்து நாட்காலையில் சோற்றுணவோடு கொடுத்து விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/7 புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்