சொல் பொருள்
(பெ) இரைச்சல் போடுபவர்,
சொல் பொருள் விளக்கம்
இரைச்சல் போடுபவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roaring men
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணைய கண்ட அம் குடி குறவர் கணையர் கிணையர் கை புனை கவணர் விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/2-5 தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர் அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும் கூவிப் பேரிரைச்சல் எழுப்பியவராய் தமது குடியின் புறத்தே ஆரவாரிக்கும் நாட்டினனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்