சொல் பொருள்
(பெ) 1. தணிதல், 2. உறக்கம், 3. முடிவு,
சொல் பொருள் விளக்கம்
தணிதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
subsiding, sleep, end
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து – நற் 208/1-3 வெற்றி பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது, அரித்தோடும் நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க, சற்றும் குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு, காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது வரி அதள் படுத்த சேக்கை – அகம் 58/3,4 காட்டில் தேடுகின்ற வேட்டையில் துயிலும் இடம் பெறாமல் புலித்தோல் விரித்த படுக்கையில், கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/5,6 கடுமையாக இடிக்கும் இடியுடன் விரைந்த நீரைச் சிதறி முடிவிடம் அறியாவாறு மேகம் பெய்தலைச் செய்யும் நடு இரவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்