சொல் பொருள்
(பெ) விழா எடுக்கும் இடம்,
சொல் பொருள் விளக்கம்
விழா எடுக்கும் இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the place where the events of the festivel / occassion are performed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வியல் ஊர் சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் – குறி 191-194 அகன்ற ஊர்களில் விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண் கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் குன்ற வேலி சிறுகுடி ஆங்கண் மன்ற வேங்கை மண நாள் பூத்த மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் ஆர் கலி விழவுகளம் கடுப்ப – அகம் 232/6-11 குன்றங்களாய வேலியினையுடைய சீறூரிடத்தே மன்றத்தின்கண்ணுள்ள வேங்கை மரங்கள் மணநாலாகிய காலத்தே பூத்த மணியை ஒத்த அரும்பு மலர்ந்த பொன் போன்ற பூக்கள் பரந்து அகன்ற பாறைகளை அழகுறுத்தும் முற்றத்திலே, குறவர்கள் மனைக்கண்ணுள்ள ஆடுதல் வல்ல மகளிரொடு குரவை ஆடும் ஆரவாரமிக்க விழாக்களத்தை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்