சொல் பொருள்
(பெ.அ) சிறந்த
(வி.அ) விழுமிதாக, சிறப்பாக,
சொல் பொருள் விளக்கம்
சிறந்த
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
great, excellent, sublime, noble, greatly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 227 சீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின் – மது 735,736 பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று, சீரிய புண்ணால் வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்