சொல் பொருள்
(வி) 1. காற்று அடி, 2. கொடு, வாரி வழங்கு, 3. விசிறு, 4. ஒளி, மணம் போன்றவை பரவு, 5. விசையுடன் எறி, 6. சிந்து, 7. கையை முன்னும் பின்னும் ஆட்டு,
சொல் பொருள் விளக்கம்
காற்று அடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blow as wind, give, give liberally, fan, spread, be diffused or emitted, as fragrance, rays, etc., throw, fling, as a weapon; to cast, as a net, spill, splash, swing hand
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48 அகன்ற கரிய ஆகாயத்திடத்தில் அடிக்கின்ற காற்று ஒன்றுசேர்வதினால் பல் பண்டம் பகர்ந்து வீசும் தொல் கொண்டி துவன்று இருக்கை – பட் 211,212 பல சரக்குகளையும் விலைசொல்லிக் கொடுக்கும், பழந்தொழிலால் வரும் உணவினைக் கொள்ளும், நெருங்கின குடியிருப்புகள் தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399 தேன் சொரிகின்ற தலையிற் சூடும் மாலையினையும், தேர்களை (அள்ளி)வீசும் கவிந்த கையினையும் உடைய வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய – நற் 241/6 அரசனுக்கு விசிறும் கவரி விசிறியைப் போல பூக்கள் புதர்களை அழகுசெய்ய விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் – கலி 145/40 தன் கதிர்களை விரித்து ஒளிவிடும் வெண்ணிலா ஒளிவீசும் மாலைப் பொழுதில் மாலை வெண் காழ் காவலர் வீச நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/1,2 மாலை நேரத்தில் வெண்மையான வயிரம்பாய்ந்த குறுந்தடியைப் புனங்காவலர் ஓங்கி எறிய, நறுமணமுள்ள பூக்களைக் கொண்ட முல்லைக் காட்டினில் பதுங்கியிருக்கும் முயல்கள் வெருண்டோடும் வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ கொண்மூ குழீஇ முகந்து – கலி 145/20-22 மழை பெய்யாமல் வறண்டு என்ன காரியம் செய்கிறாய் வானமே? பெருகிக்கிடக்கும் என் கண்ணீர்க் கடலைக் கொண்டு பெருத்த மழையைப் பெய்யப்பண்ண மாட்டாயோ – கூட்டமான மேகங்களால் முகந்துகொண்டு? அவிழ் இணர் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நற் 20/2-5 மலர்ந்த கொத்துக்களையுடைய தேன் ஒழுகும் மராமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தலானது வலமிடமாய் அசைய, கட்டியிருந்த ஆடை முன்னும் பின்னும் ஆட, செறிவான வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5 செம்மையான சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் ஆரவாரிக்க, வரிசையாய் வளையல்களை அடுக்கிய கையை வீசிக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்