சொல் பொருள்
வீச்சு – ஐந்து ரூபா
சொல் பொருள் விளக்கம்
வீசுவது வீச்சு எனப்படும். கை வீசுதல்; கயிறு வீசுதல்; சாட்டை வீசுதல்; வலை வீசுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இவற்றையன்றி ‘வீச்சு’ என்று ஐந்து என்னும் பொருளில் வழங்குவதும் உண்டு. மாட்டுச் சந்தை எனப்படும் தாம்பணியில் மாடு பிடிப்பவரும் வாங்குபவரும் கையில் துணி போட்டு மறைத்துப் பேசுவது வழக்கம். அவர்கள் பச்சை, கடுவாய், வீச்சு எனச் சில குறிப்பு மொழிகளில் கூறுவர். இவற்றுள் வீச்சு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறிக்கும். கை வீசுதல் வழியே கை விரல் எண்ணிக்கை கொண்டு வந்ததாகலாம். கை காண்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்