சொல் பொருள்
(வி.அ) தனித்தனியாக
சொல் பொருள் விளக்கம்
தனித்தனியாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
separately
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி முட்டை கொண்டு வன்_புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும் இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/5-9 காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை அடையும்l மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்லைகளைக் காண்பேம் ஈர செவ்வி உதவின ஆயினும் பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி வீறுவீறு ஆயும் உழவன் போல – புறம் 289/1-3 ஈரமாகிய பருவம் உழுதற்கு உதவிசெய்தனவெனினும் பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே தேர்ந்துகொள்வானாய் வேறுவேறாக வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்