சொல் பொருள்
(பெ) விருப்பம்,
சொல் பொருள் விளக்கம்
விருப்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/24-29 பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில், ஒரு ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல், காதலனுடனான சந்திப்பு கெடும்படியாகவும், நம் ஊருக்கெல்லாம் பெரும் பேச்சாகவும் ஆகி முடிந்துபோனது, என்றைக்கும் தனக்குத் தொழிலாகக் கொண்ட முதிய பார்ப்பானின் காம வேட்கை என்னும் பெரிய கேலிக்கூத்து! – வீழ்க்கை – வாழ்க்கை போல் நின்றது – நச். உரை விளக்கம் – வீழ்க்கை – விரும்புதல் உடைய – மா.இரா.உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்