சொல் பொருள்
சினம்கொள், சீறியெழு
சொல் பொருள் விளக்கம்
சினம்கொள், சீறியெழு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be angry, enraged
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 130,131 மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் சீறிவரும், (மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய் பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237 பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து, – அடங்கிக்கிடக்கும் அரவு ஞெரேரெனச் சீறியெழுவதைப் போன்று, உண்ணுமுன்னர் வாளாவிருந்த தேறல் உண்டவுடன் உண்டார் உள்ளத்தே ஞெரேரென வெறித்தெழுதலான். – பொ.வே.சோ விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்