சொல் பொருள்
கேடு, ஓசை, துள்ளி மேலெழுதல்
சொல் பொருள் விளக்கம்
கேடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ruin, noise, leaping
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை படு கண் முரசம் காலை இயம்ப வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 231-234 பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில் ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப, பகைவர் படைக்குக் கேடு உண்டாகக் கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி, பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள், வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த – மது 233 வெடி – ஓசையுமாம் – நச்.உரை மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 161 வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க வெடி வேய் கொள்வது போல ஓடி தாவுபு உகளும் மாவே – புறம் 302/1,2 வளைத்துவிட்ட மூங்கில் மேல்நோக்கி எழுவது போல ஓடி பாய்ந்து திரியாநின்றன குதிரைகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்