சொல் பொருள்
சிதறு, பிளவுபடு,
சொல் பொருள் விளக்கம்
சிதறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scatter, burst open
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – புறம் 93/2-4 நின்னோடு எதிர்ந்து வந்தோர் நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய், சிதறிக் கெட்டுப் போதலிலேமருவிய பெருமையில்லாத அரசரது இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப வெடி படா ஒடி தூண் தடியொடு தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/19-21 துன்பத்தைக் காட்டும் தீயசகுனங்களுடன் இடியைப் போன்ற முரசு ஒலிக்க, பிளவுபட்டு ஒடிந்துபோன தூணின் துண்டங்களோடு, இரணியனின் தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து விழ, அவன் மார்பினை வகிர்த்ந நகத்தினையுடையவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்