சொல் பொருள்
வெறும் கை, வளையணியாத கை, யானைத்தந்தம்
சொல் பொருள் விளக்கம்
வெறும் கை, வளையணியாத கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tusk of an elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும் – பதி 29/6 வெறும் கையாய் இருக்கும் மகளிர் அந்த வெள்ளைப் பறவைகளை விரட்டுகின்ற புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – மலை 28 புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து, – வெண்கை யாப்பு – யானைக் கோட்டாற் செய்த யாப்பு – பொ.வே.சா. விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்