சொல் பொருள்
வெண்டு – நரம்பு, தக்கை
சொல் பொருள் விளக்கம்
வெண்டு என்பது முகவை நெல்லை வழக்குகளில் நரம்பு என்னும் பொருளுடன் வழங்குகின்றது. “சொன்ன படி கேட்க வில்லை வெண்டை எடுத்துவிடுவேன்” என்பது அச்சுறுத்தல் மொழி. வெண்டு என்பது மேல்மிதக்கும் தக்கை என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. முன்னது விண் > விண்டு > வெண்டு எனவும், பின்னது வெண்ணிலை ( பழுஇன்மை ) எனவும் வழங்கும் வழக்குப்பட்டவையாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்