Skip to content

சொல் பொருள்

விரும்புதலுடையை, (நீ) விரும்புதலுடையவள்

வெம்மையுடையை

சொல் பொருள் விளக்கம்

விரும்புதலுடையை, (நீ) விரும்புதலுடையவள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(you) have the liking

(you) have the fervour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெய்யை போல முயங்குதி – நற் 260/5

என்மேல் மிகவும் விருப்பமுள்ளவன் போல என்னைத் தழுவவருகிறாய்,

நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் – கலி 107/20,21

உன்னை அவன் விரும்புகிறவன், அவனை விரும்புகிறவள் நீ, இப்படியிருக்க,
அன்னையைப்பற்றி நொந்துகொள்ளத் தேவையில்லை!

வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை – பரி 13/57

வேள்வியில் விருப்பமும், வீரத்தில் வெம்மையும் கொண்டிருக்கிறாய்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *