சொல் பொருள்
வெற்றிலைவைத்தல் – அழைத்தல்
சொல் பொருள் விளக்கம்
மங்கல நிகழ்வுக்கு அழைப்பார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல் வழக்கு. முன்னாளில் திருமண அழைப்பு வெற்றிலை வைத்தலாகவே இருந்தது. இன்றைக்கும் தேடிவந்த ஒருவர் ஏதாவது அடாவடியாகப் பேசி எனக்கு அது செய்யவில்லை இது செய்யவில்லை என்றால், “உங்களை வெற்றிலை வைத்தா அழைத்தோம்” என்பர். வெற்றிலை வைத்து அழைத்து வருதலும், அவ்வாறு வந்தாரை மதித்து ஆவன செய்தலும் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வழக்கு இஃதாகும். இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்காமல் இருந்ததைக் கண்ட பேருந்து ஓட்டுநர் “வெற்றிலை பாக்குக் கொண்டு வர வேண்டுமா?” என்றார். இதில் அழைப்பு முறைச்சுட்டு அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்