சொல் பொருள்
வெளிச்சம் போடல் – பகட்டுதல். விளம்பரப்படுத்துதல்
சொல் பொருள் விளக்கம்
சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவர். அதிலேயே பேரின்பங்காண்பர். அத்தகையரை வெளிச்சம் போடுபவராகக் கூறுவர். இருட்டில் இருக்கும் ஒன்றோ, மூடி வைக்கப்பட்ட ஒன்றோ பிறரால் அறியப்படுவது அருமையாம். அதனால் அவர்கள் தன்மையையும் செய்கையையும் பரபரப்பு மிக்க உலகம் அறிந்து கொள்வது இல்லை. ஆனால் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வேட்கையுடையவர்களை உலகம் வெளிப்பட அறிகிறது. தான் விரும்பாவிட்டாலும் கூட உலகம், அத்தகையரைப் பொருட்டாக எண்ணவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடுகிறது. வெளிச்சம் போடல் விளக்கேற்றலைக் குறியாமல் விளம்பரப்படுதலைக் குறித்தல் வழக்குச் சொல்லாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்