Skip to content

1. சொல் பொருள்

‌‌(பெ) சங்ககாலச் சிற்றரசர்கள் பெயர்.

  1. வெளியன்
  2. வெளியன் என்பானது மகன் தித்தன், வெளியன் தித்தன்
  3. தித்தன் என்பானது மகனான வெளியன், தித்தன் வெளியன்

2. சொல் பொருள் விளக்கம்

வெளியன் என்பானது மகன் தித்தன், வெளியன் தித்தன் எனப்படுகிறான். இவன் வீரை என்னும் ஊரை ஆண்டான். நற்றினை 58.

இவனுக்கு ஐயை என்ற ஓர் மகள் உண்டு.

தித்தன் என்பானது மகனான வெளியன், தித்தன் வெளியன் (போர்வைக்கோ பெருநற்கிள்ளி) எனப்படுகிறான். பெருந்துறை இவனது ஆளுமையின் கீழ் இருந்தது. அகம் 152

அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும் பெயற்கு உருகியாஅங்கு, 15
திருந்து இழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? – அகநானூறு 206

வேளிர் மக்கள் வாழும் ஊர் வீரை. வீரையில் உப்புக் குவியல் மழையில் நனைந்து உருகுவது போல அவனை நினைத்துக்கொண்டு நான் உருகுகிறேன்.

வெளியன் என்ற பெயரைக் கொண்ட நான்கு பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு பாடல்கள் தித்தன் வெளியன் என்பானைப் பற்றியவை. எனவே வெளியன் என்ற பெயரின் மூன்று அரசர்கள் இருந்திருக்கிறார்களென அறிகிறோம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

names of chieftains of sangam period,

Veliyan Tittan, the ruler who actually founded the Chola line of sovereigns?,

Udiyan-Cheralathan had married ‘Nallini’ the daughter of one Veliyan and Nedun- cheralatan was the son through this queen.

Ay Eyinan referred by Paranar was the son of Veliyan, ruler of Veliyam in Kottarakkara Taluk who belonged to a branch of the Ay dynasty.

Nedunjeral was the son of Udiyanjeral by Nallini, daughter of Veliyan Venman

B.C. 50 – B.C. 25   —-  வெளியன் தித்தன்  (The conqueror of Uraiyur)

B.C. 25 – A.D. 1     —-   தித்தன் வெளியன், போர்வைக்கோ பெருநற்கிள்ளி  (son of வெளியன் தித்தன்)

கரிகாலன் I (son of தித்தன் வெளியன்)

A.D. 25 – A.D. 50   —   வேல்பாதடக்கை பெருநற்கிள்ளி (probably son of தித்தன் வெளியன்)

A.D. 50 – A.D. 75   —-    உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி   (probably son of Karikalan I)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப – நற் 58/5-8

வீரை வேண்மானாகிய வெளியன் தித்தனது
முரசு முதலியவற்றோடு, மாலையில் ஏற்றப்படும் வரிசை விளக்குகளோடு
வெள்ளிய சங்குகள் முழங்க

தித்தன் என்பானது மகனான வெளியன், தித்தன் வெளியன் எனப்படுகிறான். இவன் சோழரின் கீழ் உறையூரில்
இருந்து காவல் புரிந்தான்.

நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை
சினம் கெழு தானை தித்தன் வெளியன்
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/4-6

நுண்ணிய கோலையுடைய பாணரைப் புரந்த பெரிய புகழையும்
சினம் மிக்க படையினையுமுடைய தித்தன் வெளியன் என்பானது
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம்பெருந்துறை என்னும் பட்டினத்தே

வலம் மிகு முன்பின் பாணனொடு மலிதார்
தித்தன் வெளியன் உறந்தை நாள்அவை
பாடு இன் தெண்கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/13-15

ஆற்றல் மிக்க வலிமையுடைய பாணன் என்பானொடு கூடி, தார் மலிந்த
தித்தன் வெளியன் என்பானது உறையூரின்கண்ணேயுள்ள நாளோலக்கத்தின்கண்ணே எழுந்த
ஒசி இனிய தெளிந்த கிணையினது ஒலியைக்கேட்டு அஞ்சி

இவன் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் எனப்படுகிறான். இதற்கு வெளியன் என்ற வேளிர்குல
மன்னனின் மகனான ஆய் எயினன் என்று பொருள் கொள்வார் நாட்டார் தம் உரையில்.

நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/3-5

சிறிய பிரப்பங்கோலைக் கொண்ட பாடுநர் விரும்பின், வெள்ளிய கொம்பினையும்
தலைமையுமுடைய யானையை வழங்கும் வண்மை யாலாகிய மகிழ்ச்சியினையுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *