சொல் பொருள்
வெண்மையான, வெண்மையாக ஒளிருகின்ற, வென்றிதரும், வெண்மை
சொல் பொருள் விளக்கம்
வெண்மையான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
white, bright, shining, winning, whiteness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117 பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு நிலவின் அன்ன வெள் வேல் பாடினி – பதி 61/16 நிலவின் ஒளியைப் போல வெள்ளொளி செய்யும் நின் வேற்படையைப் புகழ்ந்துபாடும் பாடினி வயக்கு_உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4 விளக்கம் மிக்க வென்றிதரும் வேலையுடையவனோடு புணர்ந்துடன் சேறல் – ஔவை.சு.து.உரை ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் இரவலர்க்கு ஈட்த யானையின் கரவின்று வான மீன் பல பூப்பின் ஆனாது ஒரு வழி கரு வழி இன்றி பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/5-9 ஆயாகிய அண்டிரன், கொல்லும் போரைச் செய்யும் தலைவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத்தொகையைப் போல, மேகம் மறைத்தலின்றி வானம் பல மீன்களையும் பூக்குமாயின், அமையாது ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக பெருக வெண்மையைச் செய்யுமாயின் அம் மீன்தொகை அதனுக்குத் தப்பாது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்