சொல் பொருள்
வேகாரி – வெட்டிச்சோறு தின்னி
சொல் பொருள் விளக்கம்
வேகு ஆரி என்பவை சேர்ந்தது வேகாரி; வெந்ததை உண்பதை அன்றி வேறொரு வேலை செய்யாதவனை ‘வேகாரி’ என்பர். ‘வெட்டி’ என்றும், ‘தண்டச்சோறு’ என்றும் கூறுவதுண்டு. வெட்டியினும் வேகாரிக்கு வேறொரு சிறப்பும் உண்டு. வெட்டி சோற்றைத் தின்னும் கேட்டுடன் அமைவான். வேகாரியோ வேறுவேறு கேடுகளும் செய்வான். சண்டைபோடல், இழுத்து விடல், கோள்மூட்டல் இன்னவெல்லாம் அவன் செய்யும் சிறுமைகளாம். “வெட்டிப் பயலைக் கட்டி அழுதாலும் வேகாரிப்பயலை ஒட்டக் கூடாது” என்பது வழக்குமொழி.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்