சொல் பொருள்
வேள்விசெய்யும், யாகம் செய்யும், விரும்புகின்றன
சொல் பொருள் விளக்கம்
வேள்விசெய்யும், யாகம் செய்யும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
offering sacrifices, (they) long for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 54-56 ஒளிவிடும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய) (நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி, துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும் – புறம் 280/4 உறங்குதல் ஒழிந்த என் கண்களும் உறக்கத்தை விரும்புகின்றன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்