சொல் பொருள்
வேட்டி துண்டு கட்டல் – இறுதிக் கடன் கழித்தல்
சொல் பொருள் விளக்கம்
வேட்டி துண்டு கட்டல் என்பது நீத்தார் கடனில் நிறைவாகச் செய்யப்படுவதாம். மகளிர்க்குக் கோடி போடுதல் என்பதும், ஆடவர்க்கு வேட்டி துண்டு கட்டுதல் என்பதும் வழக்கு. பெண் கொண்டு கொடுத்தவர்கள் இதனைச் செய்வர். இழப்புக்கு ஆட்பட்டவர்களுக்கு மொட்டையடித்து நீராட்டி வேட்டி துண்டு கட்டுதல் வழக்கம். சில இடங்களில் தலையில் துண்டைக் கட்டுதல் உண்டு. அதனால் ‘லேஞ்சி கட்டு’ என்றும் வழங்கப்படுகிறது. “லேஞ்சி” என்பது தலைப்பாகையாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்